News July 8, 2025
அரசு பள்ளிக்கு விருது வழங்கிய அமைச்சர்

கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கல்வி, விளையாட்டு, மாணவர் மேம்பாடு, பள்ளி கட்டமைப்பு, பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடு உள்ளிட்ட அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியது. இதனால் தமிழ்நாடு அரசு மாவட்ட அளவில் சிறந்த தொடக்கப்பள்ளிக்கான பிரிவில் அறிஞர்அண்ணா தலைமைத்துவ விருதினையும், பரிசுத் தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினையும் அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். ஷேர் பண்ணுங்க
Similar News
News July 8, 2025
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பணிகள் குறித்து கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் வரும் 15.07.2025 முதல் நடைபெறவுள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தலைமையில் இன்று (08.07.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், தனித்துறை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் உள்ளனர்.
News July 8, 2025
வாடகை வீட்டில் குடியிருப்பவரா நீங்கள்? 2/2

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கன புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. 3 மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும் SHARE IT
News July 8, 2025
வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்? 1/2

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 / 9445000429 (வாடகை அதிகாரியிடம்) புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி வாடகை அதிகாரியிடம் புகார் செய்யலாம் . ஷேர் பண்ணுங்க. தொடர்ச்சி