News July 11, 2024

அரசு பள்ளிகளின் மேம்பாடு; ஆட்சியர் வேண்டுகோள்

image

மயிலாடுதுறை மாவட்ட அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊர்’ திட்டத்தின் மூலமாக சமூக நிதி பங்களிப்பு வழங்க ஆட்சியர் மகாபாரதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த nammaschool@tnschools.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்களை அனுப்பலாம் அல்லது 9500349916 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 17, 2025

மயிலாடுதுறை: இப்படி ஒரு வரலாறு நிறைந்த இடமா?

image

பூம்புகார் கடலடி அருங்காட்சியகம் என்பது சீர்காழி வட்டம் பூம்புகார் பகுதியிலுள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் ஆகும். 1997ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் ஆகும். இங்கு ரோமானிய மற்றும் சீன பானை ஓடுகள், புத்தர் சிலை, சிலம்பு, அழகன்குளம் ஆய்வில் கண்டறியப்பட்ட முத்திரைப் பானை ஓடுகள் போன்றவை உள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 17, 2025

மறைந்த இல உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அமைதி பேரணி

image

மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி பூங்கா அருகில் இருந்து அமைதி பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வர மயிலாடுதுறை பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது.தொடர்ந்து இல கணேசன் திருவுருவப்படத்திற்கு பாரதிய ஜனதா கட்சியினர் மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.

News August 16, 2025

மயிலாடுதுறை: பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை!

image

ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையான (BRBNMPL) நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்படவுள்ளது. கல்வி தகுதி Deputy Manager பதவிக்கு B.E , B.Tech மற்றும் Process Assistant Grade-I பதவிக்கு ITI , Diploma முடித்திருக்க வேண்டும். Rs.24,500/- சம்பளம் முதல் Rs.88,638 வரை வழங்கப்படும். நேர்முக தேர்வுக்கு செல்ல விரும்பினால் <>இங்கே கிளிக்<<>> செய்து உடனே விண்ணப்பிக்கவும். SHARE IT Now

error: Content is protected !!