News January 10, 2025

அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

image

ஸ்ரீவி மடவார் வளாகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதில் 17 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் கொண்ட நெல் மட்டுமே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. சன்ன ரக நெல்லுக்கு கிலோ ஒன்றுக்கு அரசு ஊக்கத்தொகை உடன் ரூ. 24.50,மோட்டா ரக நெல்லுக்கு ரூ.24.05 வழங்கப்படுகிறது. நெல் கொள்முதலுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தபடும் செலுத்தபடும்.

Similar News

News February 1, 2026

விருதுநகர்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News February 1, 2026

விருதுநகர்: சிறுமிகள் கர்ப்பம்.. இளைஞர்கள் மீது போக்சோ

image

வெம்பக்கோட்டை பகுதியை சேர்ந்த காளியப்பன் (23) 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதில் சிறுமி கர்ப்பமானதை அடுத்து அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. சிவகாசி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (22) சென்னையை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமண செய்து கொண்டார். சிறுமி கர்ப்பமானதை அடுத்து அவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

News February 1, 2026

விருதுநகர்: விஷம் குடித்து இளைஞர் தற்கொலை

image

சாத்துார் அருகே வல்லம்பட்டியை சேர்ந்த வடிவேல் (46) என்பவரின் மகன் பாலகுரு (21) B.A (தமிழ்) டிகிரி முடித்த இவருக்கு வேலை கிடைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தி அடைந்த பாலகுரு விஷம் குடித்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!