News October 19, 2024
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு இரண்டு தொழில் பிரிவுகளில் சேர பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை மூலம் கடந்த செப்டம்பர் 30 வரை சேர்ந்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது ஒரு சில தொழில் பிரிவுகளில் 100% பயிற்சியாளர்கள் சேர்க்கை பூர்த்தியடையாத காரணத்தால் மேலும் வரும் அக்.30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 10, 2025
விருதுநகரில் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு இங்கே <
News July 10, 2025
பாலையம்பட்டி பைபாஸில் விபத்து; மூவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பாலையம்பட்டி ஊராட்சியில் (ஜூலை 10) காலை 5 மணியளவில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு லாரி டிரைவர்களான மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இரண்டு லாரிகளிலும் முன் பக்கம் முற்றிலும் சேதமாகியது. இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 10, 2025
உயர் கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களை கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியியல் சேர்ப்பது தொடர்பான நான்காம் கட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் வெள்ளி (11.07.25) அன்று நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.