News November 6, 2025
அரசு திட்டங்களில் முன்னேற்றங்கள் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரியம் பல்லவி பல்தேவ் தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று (நவ.6) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களில் முன்னேற்றங்கள் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, திட்ட இயக்குனர் சரண்யா தேவி கலந்து கொண்டனர்.
Similar News
News November 7, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News November 6, 2025
தாயுமானவர் திட்டத்தை பொதுமக்களிடம் கேட்டறிந்த ஆட்சியர்

இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் M.மரியம் பல்லவி பல்தேவ், ஆட்சியர் சந்திரகலா தலைமையில் தாயுமானவர் திட்ட குறித்து ஆய்வு நடைபெற்றது. இன்று (நவ.6) வேலம் ஊராட்சியில் கூட்டுறவுத் துறையின் மூலம் தாயுமானவர் திட்டத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தின் செயல்பாட்டை ஆய்வு குறித்து கேட்டறிந்தார்
News November 6, 2025
அரசு நத்தம் இடத்தில் பட்டா கண்காணிப்பு அலுவலர்

வாலாஜா நகராட்சி கடப்பராயன் தெருவில் அரசு நத்தம் இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தவர்களுக்கு அரசு வீட்டு மனை பட்டா வழங்கி உள்ளது. இந்த பட்டா வழங்கப்பட்டது குறித்து பயனாளிகளிடம் இன்று (நவ.6) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரியம் பல்லவி பல்தேவ் கேட்டறிந்தார். அப்போது பயனாளிகள் தங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உடன் இருந்தார்.


