News August 6, 2024

அரசு சாா்பில் ரூ.3 லட்சம் மானியம் – ஆட்சியர்

image

தேனியில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், சீா்மரபினரின் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஆயத்த ஆடை உற்பத்தி நிலையம், நவீன சலவையகம் அமைக்க அரசு சாா்பில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Similar News

News January 29, 2026

தேனி: மனைவியை கத்தியால் குத்திய கணவன்

image

உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மனைவி மஞ்சு. இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருந்தனர். இந்நிலையில் நேற்று கணவரின் வீட்டிற்கு சென்ற மஞ்சு அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ராஜாராம் மஞ்சுவை கத்தியால் குத்திவிட்டு போலீசில் சரணடைந்தார். உடனே அங்கு சென்ற போலீசார் மஞ்சுவை மீட்டு GH-ல் சேர்த்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜாராமை கைது செய்தனர்.

News January 29, 2026

தேனி: இளம்பெண் தற்கொலை

image

தேனி மாவட்டம், வருசநாடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகா (25). இவருக்கும், இவரது கணவருக்கும் சில வருடங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கணவர் மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த ஸ்ரீகா நேற்று முன் தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!