News May 30, 2024
அரசு கல்லூரி பொது கலந்தாய்வு தேதி அறிவிப்பு

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரியில் புதிய கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற ஜூன் 10ஆம் தேதி முதல் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி முதல்வர் மைதிலி அறிவித்துள்ளார். தொடர்ந்து 14 ஆம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News July 5, 2025
மூலைக்கரைப்பட்டியில் கடன் வசூலிக்க சென்றவர் மீது தாக்குதல்

மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி பிரின்ஸ், வண்ணாரப்பேட்டை வங்கியில் பெற்ற டிராக்டர் கடனின் மூன்று மாத தவணையை செலுத்தவில்லை. இதையடுத்து, வங்கி ஊழியர் மாரியப்பன் நேற்று (ஜூலை.04) கடன் தொகை கேட்டு பிரின்ஸை அணுகியபோது, பிரின்ஸ் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், மூலைக்கரைப்பட்டி காவல்துறையினர் பிரின்ஸை வலைவீசி தேடி வருகின்றனர்.
News July 5, 2025
நெல்லையில் 20 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்

நெல்லை அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இதற்காக விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணியிடமாறுதல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 167 பேர் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த நிலையில் 20 பேருக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதல் கிடைத்துள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
News July 4, 2025
காவல்துறைக்கு வருவதற்கு காரணம் என் மனைவி – துணை காவல் ஆணையர்

திருநெல்வேலி பழைய பேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு ஒரு வார புத்தாக்க பயிற்சி நடைபெறுகிறது. இன்றைய நிகழ்ச்சியில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் பேசினார். அவர் கூறியதாவது; தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் மாணவிகள் வெற்றி பெறலாம். மருத்துவத்துறையில் இருந்து காவல்துறைக்கு வந்ததற்கு என் மனைவியின் ஆதரவு முக்கிய காரணம் என்றார்.