News May 6, 2024
அரசு கல்லூரியில் சேர இன்று விண்ணப்பம்

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர். , திருத்துறைப்பூண்டி நன்னிலம் கூத்தாநல்லூர் ஆகிய பகுதிகளில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர www.tngasa.in இனைய முகவரியில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இனைய வழியில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் கல்லூரியில் செயல்படும் சேர்க்கை உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
திருவாரூர்: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 24, 2025
திருவாரூர்: லாரி மீது பேருந்து மோதி விபத்து

மன்னார்குடியில் இன்று காலை மகா மாரியம்மன் கோயில் அருகே புதுக்கோட்டையில் இருந்து, ஜல்லி கற்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரி மீது பின்னால் சென்ற மினி பேருந்து லாரி மீது மோதியது. பஸ்ஸில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
News November 24, 2025
திருவாரூர்: மழையால் இடிந்து விழுந்த வீட்டின் சுவர்

முத்துப்பேட்டை, தர்காஸ் கிராம விவசாய கூலித்தொழிலாளி செல்லதுரை (60) என்பவரது கூரை வீட்டு சுவர், இன்று கனமழையால் இடிந்து வெளிப்புறம் விழுந்தது. இதனால் வீட்டில் இருந்த செல்லத்துரை, அவரது மாற்றுத்திறனாளி மகள், மனைவி மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தநிலையில் பாதிப்பு ஏற்பட்ட இந்த குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும், இலவச வீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


