News May 8, 2025

அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

image

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2 மட்டும். மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

Similar News

News September 22, 2025

விழுப்புரம்: உயிர் நண்பனை கழுத்தறுத்து கொன்ற இருவர் கைது

image

பண்ருட்டி அருகே கார்த்திகேயன் என்பவர் தனது 2 நண்பர்களோடு மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 2நண்பர்கள் சேர்ந்து கார்த்திகேயனை கழுத்தை அறுத்துக்கொன்று குளத்தில் வீசியுள்ளனர். கார்த்திகேயன் வீடு திரும்பாத நிலையில் 3 நாள் கழித்து சொக்கநாதர் குளத்தில் இருந்து அழுகிய நிலையில் 18ஆம் தேதி அவரின் உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் 2 நண்பர்களையும் போலீசார் இன்று கைது செய்தனர்.

News September 22, 2025

விழுப்புரம்: நவராத்திரியில் இதை பண்ணுங்க!

image

நவராத்திரி வழிபாட்டை கொலு, கலசம், படம், அகண்ட தீபம் என 4 வழிகளில் மேற்கொள்ளலாம். கொலுவில், படிகளை 3, 5, 7, 9, 11 என ஒற்றைப்படையில், கிழக்கு/வடக்கு திசையில் அமைக்க வேண்டும். பொம்மைகளை பரிணாம வளர்ச்சிப்படி (முதல் படி ஓரறிவு,6ஆம் படி மனிதர்கள், 9ஆம் படி தேவியர்/கலசம்) 9ஆம் படியில் முப்பெரும் தேவியரும், கலசமும் வைப்பது அவசியம். விழுப்புரம் மேல்மலையனுர் அம்மன் கோயிலில் வழிபடுவது மிகவும் நல்லது.ஷேர்

News September 22, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் செப்.21 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!