News May 31, 2024

அரசு கலை கல்லூரியில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு.

image

கோவை அரசு கலை கல்லூரியில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டு இளநிலை பிரிவில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவு கடந்த மே. 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. மொத்தம் 127 சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களில் 90 இடங்கள் நிரம்பின. ஜூன் 10 ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Similar News

News August 20, 2025

கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் பார்களுக்கு இன்று ஏலம்

image

கோவை வடக்கு கலால் மாவட்டத்தில் 157 டாஸ்மாக் கடைகளுக்கு பார் ஏலம் விடப்பட்டிருந்தது. இதில் சுமார் 50 கடைகளுக்கான பார் ஏலம் நடத்தப்படவில்லை. மூன்று மாத இடைவெளிக்கு பின்னர் இன்று மறு ஏலத்திற்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட உள்ளது. இதில் விடுபட்ட பார்களுக்கான ஏலம் இறுதி செய்யப்பட உள்ளது. இன்னும் மூன்று மாதத்தில் அனைத்து பார்களுக்கும் பொது ஏலம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 20, 2025

கவனமாக இருங்கள் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

image

கோயம்புத்தூரில் உள்ள சுங்கம் பகுதியில், சைபர் குற்றங்கள் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் மோசடிகள் குறித்து நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சைபர் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் சரவணன் பங்கேற்றுப் பேசினார். அப்போது தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ளக் கூடாது,மோசடி நடந்தால், உடனடியாக 1930 என்ற எண்ணை அழைத்தோ அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றார்.

News August 20, 2025

கோவை வாடகை வீட்டுக்கு போறீங்களா?

image

கோவை வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!