News August 6, 2024
அரசு ஐ.டி.ஐயில் விண்ணப்பிக்க ஆகஸ்ட்16 வரை நீட்டிப்பு

கரூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான் நேரடி சேர்க்கை வரும் ஆகஸ்ட் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு 14 முதல் 40 வயதுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.இதில் பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.மேலும் விவரங்களுக்கு, கரூரில் இயங்கும் ஐடிஐ நிலையத்திலோ, 04324 222111, 9499055711 என்ற தொலைபேசி எண்ணிலோ அறிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News February 9, 2026
அறிவித்தார் கரூர் கலெக்டர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான சிறப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். ஆடை வடிவமைப்பு, அழகுக்கலை பயிற்சியில் சேர விருப்பமுள்ள தகுதியுள்ள இளைஞர்கள் www.tahdco.com என்ற முகவரியின் வாயிலாக தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். (ஷேர் பண்ணுங்க)
News February 9, 2026
கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.