News May 14, 2024
அரசு ஐடிஐ-யில் சேர விண்ணப்பிக்கலாம் ஆட்சியர்
ராணிப்பேட்டை அரசு ஐடிஐயில் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்; இங்கு எலக்ட்ரீசியன், ஃபிட்டர் மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் ஓராண்டு மற்றும் இராண்டு வகுப்புகள் உள்ளன. 14 முதல் 40 வயது உடையவர்கள் மே 10 முதல் ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9499055681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2024
கோவை டபுள் டக்கர் பிருந்தாவன் ரயில்கள் தாமதம்
சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் பராமரிப்பு பணிகள் குறித்த நேரத்தில் முடியாத காரணத்தினால் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணத்திற்கு மூன்று மணி நேரம் கால தாமதமாக வந்தது. அதேபோன்று ஏசி டபுள் டக்கர் மற்றும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டரை மணி நேரம் கால தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
News November 20, 2024
ராணிப்பேட்டை அருகே நாளை மின்தடை
அரக்கோணம் கோட்டத்தைச் சேர்ந்த இச்சிப்புத்தூர் மற்றும் பள்ளூரில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (21-11-2024)மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. இச்சிப்புத்தூர்,தணிகை,போளூர்,திருமால்பூர்,சயனபுரம், சேந்தமங்கலம்,வாணியம்பேட்டை, தண்டலம், உளியம்பாக்கம், வளர்புரம், ஈசலாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
ராணிப்பேட்டை அருகே வாகனங்களுக்கு அதிக கட்டணம்
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஸ்ரீலட்சுமிநரசிம்மர் கோயிலில் கார்த்திகை மாதம் பெருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு நகராட்சி ஒப்பந்ததாரர் அதிக கட்டண வசூல் செய்வதால் பக்தர்கள் அவதிக்கு ஆளாகின்றனர். கோயிலுக்கு வரும் கார்களுக்கு வாகன நிறுத்த கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது.எப்போதும் 30 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் கார்த்திகை மாதத்தில் மட்டும் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.