News February 3, 2026

அரசு ஊழியர்களின் சம்பளம் கட்.. ஏன் தெரியுமா?

image

உ.பி.,யில் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 68,000-க்கும் அதிகமான அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கி சொத்துகளை சேர்க்கும் ஊழியர்களை கண்டறியும் விதமாக அம்மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த செய்தியை SM-ல் பதிவிட்டு, தமிழ்நாட்டிலும் இதுபோன்று நடவடிக்கை எடுத்தால் எப்படி இருக்கும் என நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து?

Similar News

News February 9, 2026

வீட்டில் இதையா யூஸ் பண்றீங்க?

image

பலரும் காய்கறிகள் நறுக்க பிளாஸ்டிக் Chopping Board தான் பயன்படுத்துகிறோம். இது நல்லதல்ல என்கின்றனர் டாக்டர்கள். காய்களை நறுக்கும்போது, கத்தி பட்டு, போர்டும் சேதமாகிறது. அப்போது துண்டாகும் பிளாஸ்டிக் துணுக்குகள் உணவில் கலக்கின்றன. அப்போது ஏற்படும் பள்ளங்களில் பாக்டீரியாக்கள் வளர்வதால், அதுவும் நோய்களை உண்டாக்குகிறது. இதனால் ஹார்மோன் பாதிப்பு, உடல்பருமன், கேன்சர் வரும் ஆபத்து அதிகரிக்கிறது.

News February 9, 2026

சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தனர் PHOTO

image

தேர்தல் நெருங்குவதால், மாற்று கட்சியினர் மற்றும் அமைப்புகளை தங்கள் கட்சியில் இணைக்க பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், தஞ்சை ஆவூர் ஜமாஅத் தலைவர் ஹசன் பசீர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் EPS-ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். அவர்களை கட்சி துண்டு போர்த்தி வரவேற்ற EPS, அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டார்.

News February 9, 2026

₹24,000 கோடி மதிப்பிலான உலகின் மிகப்பெரிய வீடு!

image

₹24,000 கோடி மதிப்பிலான உலகின் மிகப்பெரிய வீடுகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் அரண்மனை வதோதராவில் அமைந்துள்ளது. இது 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கெய்க்வாட் அரச குடும்பத்திற்காக பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் ராபர்ட் சிசோம் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அரண்மனையில் 170 அறைகள், அருங்காட்சியகங்கள், தோட்டங்கள், ரவிவர்மா ஓவியங்கள் மற்றும் ஒரு கோல்ஃப் கிளப் உள்ளன.

error: Content is protected !!