News March 18, 2026

அரசு இயந்திரத்திற்கு வெட்கக்கேடு: நயினார்

image

<<19356260>>விளாத்திகுளத்தில் <<>> பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தை நயினார் சந்தித்து ஆறுதல் கூறினார். தனது X பதிவில், மாணவியின் குடும்பத்தாரின் கண்ணீர் முகம் தனது நெஞ்சில் ஆறாத வடுவாக உறுத்துகிறது. இவ்வழக்கில், இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்காதது அரசு இயந்திரத்திற்கு வெட்கக்கேடு; ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும் என கூறியுள்ளார்.

Similar News

News March 26, 2026

ஜெட் வேகத்தில் அதிமுக.. டேக் ஆஃப் ஆகாத திமுக: இன்பதுரை

image

அதிமுக கூட்டணி ஜெட் வேகத்தில் டேக் ஆஃப் ஆகி சென்று கொண்டிருப்பதாக அதிமுக MP இன்பதுரை தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடித்த கையோடு தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், திமுக கூட்டணி டேக் ஆஃப் ஆகாமல் ஒரே இடத்தில் நிற்கிறது என விமர்சித்தார். மேலும், திமுக தோற்றுவிடும் என தெரிந்ததால் தேர்தலில் இருந்து கமல் பின்வாங்கியுள்ளார் எனவும் சாடினார். <<-se>>#TNElection2026<<>>

News March 26, 2026

வங்கி கணக்கில் ₹2,000.. வந்தாச்சு HAPPY NEWS

image

PM KISAN திட்டத்தின் <<19374875>>22-வது தவணை<<>> ( ₹2,000) விவசாயிகள் வங்கி கணக்கில் இம்மாதம் வரவு வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் மேலும் பல விவசாயிகளை இணைக்க திட்டமிட்டுள்ளதாக, மகிழ்ச்சியான தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. புதிதாக திட்டத்தில் இணைவதற்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என்றும் தகுதியுள்ள விவசாயிகள் ஆதாரை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் எனவும் மத்திய வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

News March 26, 2026

7 போட்டிகளை சேப்பாக்கத்தில் விளையாடும் CSK

image

IPL போட்டிகளின் 2-ம் கட்ட அட்டவணையை BCCI வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே மார்ச் 28 – ஏப்ரல் 12 வரையிலான 20 போட்டிகளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 13 – மே 24-ம் தேதி வரையிலான போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி CSK அணி 7 போட்டிகளை சென்னை சேப்பாக்கத்தில் விளையாட உள்ளது. பிளேஆஃப் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

error: Content is protected !!