News May 11, 2024
அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து பயில வாய்ப்பு- முழு விவரம்

புதிய கல்வி ஆண்டில் நெல்லை அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இங்கு குரல் இசை, நாதஸ்வரம், தவில் தேவாரம் பரதநாட்டியம் வயலின் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்சிவிக்கப்படுகின்றன. 12 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04622900 926 மற்றும் 94438 10 926 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 11, 2025
நெல்லை அரசு பஸ் டிரைவர்களுக்கு நிர்வாகம் அறிவுரை

வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளதால் அரசு ஓட்டுநர்கள் பயணிகள் பாதுகாப்பு கருதி கவனமுடன் பஸ்களை இயக்க வேண்டும் என நெல்லை அரசு போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மழை நேரத்தில் சுரங்கப்பாதையில் நீர் தேங்கி இருந்தால் மாற்று பாதையில் செல்ல வேண்டும். தரைப்பாலங்களுக்கு மேல் தண்ணீர் செல்லும் போது அந்தப் பாதையில் பஸ்சை இயக்க கூடாது போன்ற அறிவுரைகளை வழங்கினர்.
News November 11, 2025
நெல்லையில் 6 இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையம், ஐ என் எஸ் கட்டபொம்மன், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட ஆறு முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்க டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி அறிவுறுத்தியுள்ளார். நெல்லை சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரவு ரோந்து பணியில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
News November 11, 2025
திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேர ரூம் அதிகாரிகள் நியமிப்பு

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டு வகையிலும் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலும் திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேர ரோந்து அதிகாரிகளை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி நியமித்துள்ளார். திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகாரிகள் ரோந்து பணிகளையும் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர்


