News March 23, 2024

அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6,272 அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு முதல் கட்டமாக தேர்தல் பயிற்சி வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 5 இடங்களில் முதல் கட்ட பயிற்சி மார்ச் 24 ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

Similar News

News February 12, 2026

வேலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் பொது விநியோக திட்டத்தின் சார்பில் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ள சிறப்பு குறைதீர்வு முகாம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற உள்ளது. காலை 10 மணியளவில் நடைபெற உள்ள இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

வேலூர் சிறையில் 45 பேர் தேர்வுக்கு தயார்!

image

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் இந்த ஆண்டு 15 சிறைவாசிகள் +2 தேர்வை எழுத உள்ளனர். அதேபோல் 10-ம் வகுப்பு தேர்வை ஆண்கள் சிறையில் 12 பேர், பெண்கள் சிறையில் 8 பேர் என மொத்தம் 45 கைதிகள் எழுத உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக மத்திய சிறையில் தேர்வு மையம் அமைந்துள்ளது.

News February 12, 2026

வேலூரில் நள்ளிரவில் திடீர் தீ!

image

வேலூர் மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட ஓட்டேரி பகுதியில் மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று ( பிப்.11 ) இரவு தீவிபத்து ஏற்பட்டது. தீயினால் குப்பைகள் எரிந்து அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து வேலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு எரிந்து கொண்டிருந்த குப்பையை அனைத்தனர்.

error: Content is protected !!