News March 1, 2025
அரசுப் பள்ளிகளில் 25,000 மாணவர்களைச் சேர்க்க இலக்கு

சேலம் மாவட்டத்தில் கடந்தாண்டு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 22,000 குழந்தைகளை 1-ம் வகுப்பில் பெற்றோர்கள் ஆர்வமுடன் சேர்த்துள்ளனர்.அதேபோல் இந்தாண்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கை வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.அரசுப் பள்ளியில் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களை பெற்றோர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்- சேலம் ஆட்சியர்.
Similar News
News March 1, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.01 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News March 1, 2025
சேலத்தில் 16 லட்சம் மோசடி? ஆயுதப்படை எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

மாநகர ஆயுதப்படை எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் பாஸ்கரன். இவர் லோகாம்பாள் என்பவரிடம் 16 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் மோசடி செய்தது உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் பிரவீன் குமார் அபினவ் இன்று உத்தரவிட்டுள்ளார்.
News March 1, 2025
டிகிரி போதும்..இந்திய அஞ்சல் வங்கியில் வேலை

இந்திய அஞ்சல் துறையின் ஒரு பகுதியாக செயல்படும் ‘இந்திய அஞ்சல் பேப்மெண்ட் வங்கியில்’ (India Post Payments Bank) உள்ள 51 நிர்வாகி காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக தரப்படும். விண்ணப்பிக்க இங்கே <