News August 28, 2025

அரசுப் பள்ளிகளில் நாளை பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

image

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் உத்தரவின் படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை (ஆக.29) மாலை 3 மணி முதல் 4:30 மணி வரை ஆகஸ்ட் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். திறன் திட்டம், மணற்கேணி பள்ளி தூதுவர்கள் திட்டம் போன்ற பல்வேறு கல்வி வளர்ச்சி செயல்பாடுகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

Similar News

News March 9, 2026

திருவாரூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

திருவாரூர்: இ.கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த மாற்றுகட்சியினர்

image

நீடாமங்கலம் ஒன்றியத்தில் பல்வேறு அரசியல் கட்சியில் இருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 50க்கும் மேற்பட்டோர் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் கேசவராஜ், மாவட்ட பொருளாளர் தவபாண்டியன், ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், துணைச் செயலாளர் பாரதிமோகன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் மாநில குழு உறுப்பினர் ராதா, நகர கிளைச் செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News March 9, 2026

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவி தற்கொலை!

image

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே ஆர்ப்பாவூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சோபியா. இவர் மத்திய பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி பயின்று வந்தார். இந்த நிலையில் நேற்று (மார்ச் 08) சோபியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் இவர் இறப்பதற்கு முன்பாக பெற்றோரிடம் தொலைப்பேசியில் பேசிய பிறகே தற்கொலை செய்துள்ளதாகவும், ஆகவே இதில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!