News January 26, 2026
அரசுப் பள்ளிகளில் ‘அயலி’ பார்க்க ரெடியா மாணவர்களே!

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘அயலி’ வெப் சீரிஸை பள்ளிகளில் ஒளிபரப்ப பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் சிறார் படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், ஜனவரியில் அயலி திரையிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் ‘அயலி’ ஒளிபரப்பப்பட உள்ளது. மாணவர்களே, படம் பார்க்க ரெடியா!
Similar News
News February 6, 2026
அதிகாரிகளின் அலட்சியத்தால் பலியான இளைஞர்!

டெல்லி ஜனக்புரியில் நீர்வாரியத்தால் தோண்டப்பட்ட ஆழமான பள்ளத்தில் இளைஞர் ஒருவர் பைக்குடன் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முறையான எச்சரிக்கை பலகைகள், தடுப்புகள் அமைக்காததே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. மக்களிடம் வரி வசூலுக்கும் அரசாங்கம் அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு தவறிவிட்டதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
News February 6, 2026
H.ராஜாவை சந்தித்து நலம் விசாரித்தார் அண்ணாமலை

சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்றுவரும் பாஜக மூத்த தலைவர் H.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஹாஸ்பிடலுக்கு விரைந்த அண்ணாமலை, H.ராஜாவை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், குடும்பத்தினரிடமும் அவர் தைரியம் கூறினார். H.ராஜா நலம்பெற வேண்டி பழனி முருகன் கோயிலுக்கு அண்ணாமலை காவடி எடுத்தது குறிப்பிடத்தக்கது.
News February 6, 2026
அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய இதுவே காரணம்: TTV

பிஹார் தேர்தலுக்கு முன்னரே NDA-வில் இணைய டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தல் முடிந்த பின், தன்னை நேரில் அழைத்து அமித்ஷா கூட்டணியில் சேர கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். NDA-வில் சேர தனக்கு ஆட்சேபனை இல்லை, ஆனால் EPS-ன் நிலைப்பாடு என்னவென கேட்ட போது, அவருக்கு முழு சம்மதம் என அமித்ஷா சொன்ன பிறகே கூட்டணியில் இணைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


