News October 25, 2024
அரசுக்கு ரூ.1.14 கோடி இழப்பு ஏற்படும்: ராமதாஸ்
வானூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “திமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, 600 மகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.1.14 கோடி இழப்பு ஏற்படும். எனவே, பேருந்து கட்டணம் உயர வாய்ப்புள்ளது” என்றார்.
Similar News
News November 20, 2024
பைக் மீது லாரி மோதி விபத்து: இளைஞர் பலி
விக்கிரவாண்டி அருகே உள்ள பாப்பனப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராகுல், மணிகண்டன், விஷ்வா மூவரும், நேற்று ஒரே பைக்கில் அழுக்கு பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரி ஒன்று பைக் மீது மோதியது. இதில் மூவரும் படுகாயமடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராகுல் உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 20, 2024
விழுப்புரம் வழியாக சபரிமலைக்கு ரயில் சேவை
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக, விழுப்புரம் வழியாக சபரிமலை செல்வதற்காக கொல்லம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16101) ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது, தினசரி இரவு 7.20 மணிக்கு விழுப்புரத்திற்கு வருகிறது. மறுநாள் காலை 6 மணிக்கு புனலூர் வழியாக கொல்லம் செல்கிறது. புனலூரில் இருந்து சபரிமலை செல்வதற்கு ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன. ஐயப்ப பக்தர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
News November 20, 2024
விழுப்புரத்தில் இன்று மின்தடை அறிவிப்பு
விழுப்புரத்தில் இன்று (நவ.20) முருக்கேரி, கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கிளப்பாக்கம், கீழ்சிவிரி, ஆவணிபூர், அச்சிப்பாக்கம், கருவைப்பாக்கம், ஆண்டப்பட்டு. மரக்காணம், ஆச்சிக்காடு, குட்டுகாடு, திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீழ்ப்பேட்டை, அனுமந்தை ஆகிய சுற்றுப்புற பகுதிகளில் (9AM – 2PM) மின்தடை ஏற்படும். SHARE