News December 31, 2024
அரசுக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட காவலர் சஸ்பெண்ட்

வேலூர் தாலுக்கா காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த அன்பரசன் தனது முகநூல் பக்கத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராக வெளியான பதிவுக்கு ஆதரவாக தனது கருத்து பதிவு செய்துள்ளார். இது குறித்து மாவட்ட காவல் அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அன்பரசனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 8, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி ( நவம்பர்-07) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News November 7, 2025
வேலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
News November 7, 2025
வேலூர்: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <


