News January 11, 2025

அரசுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கண்டனம்

image

தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு முன்வந்து அதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் இத்திட்டம் வேண்டாம் என்று தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தமிழக அரசின் இந்த செயலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் வர்த்தக அணி மாநில செயலாளருமான சி.தி. செல்லப்பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 15, 2025

தூத்துக்குடி: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

image

தூத்துக்குடி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 20.1.2026. சம்பளம் ரூ.28,200 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News December 15, 2025

தூத்துக்குடியில் 140 பேர் மீது குண்டாஸ்

image

தூத்துக்குடியில் கடந்த நவ.15 அன்று சிப்காட் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்ற வழக்கில் மேலசண்முகபுரம் அரிகிருஷ்ணன் (54), கோரம்பள்ளம் ரவிகுமார் (53) ஆகிய 2 பேர் கைதாகினர். நேற்று எஸ்.பி பரிந்துரையின்படி கலெக்டர் உத்தரவிட்டதன் பெயரில் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த ஆண்டு இதுவரை 140 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 15, 2025

பாஜக மாவட்ட தலைவர் கண்டனம்

image

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் நிதி பங்களிப்பில் பல்நோக்கு மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டது. இதன் பணிகள் 95% முடிவடைந்த நிலையில் தமிழக அரசு திடீரென்று இந்த மருத்துவமனையை மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றியுள்ளது. இது தூத்துக்குடி மக்களுக்கு திமுக செய்துள்ள பெரும் துரோகம் என்று பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!