News February 16, 2026

அரசியல் நிலைப்பாட்டை சொன்ன நடிகை த்ரிஷா!

image

தான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை, யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதும் இல்லை என நடிகை த்ரிஷா தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ளார். விஜய்யை, த்ரிஷாவுடன் தொடர்புபடுத்தி நயினார் நாகேந்திரன் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. அதற்கு <<19157392>>பதிலடி கொடுத்துள்ள அவர்<<>>, உயர் பதவியில் இருப்போர் பொது இடங்களில் சமநிலையுடன் இருப்பது அவசியம் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

Similar News

News February 17, 2026

பிப்.20-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்!

image

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.20-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற ஆய்வுக் குழு கூட்டத்தில், கூட்டத்தொடர் கால வரம்பை நிர்ணயித்த சபாநாயகர் அப்பாவு, நாளை மற்றும் நாளை மறுநாள் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

News February 17, 2026

பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லாதது ஏன்?

image

பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லாதது குறித்து TN அரசு விளக்கம் அளித்துள்ளது. பொதுவாக இடைக்கால பட்ஜெட் என்பது அரசின் சாதனைகளை தெரிவிக்கும் அறிக்கையாகவே இருக்கும் என்றும் புதிய அறிவிப்புகளை வெளியிடுவது மரபு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் இடைக்கால நிதிக்கு ஒப்புதல் கோரும் அறிக்கையாக இடைக்கால பட்ஜெட் இருக்கும் என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

News February 17, 2026

அதிமுகவில் இணைந்தார்.. திமுகவுக்கு பெரிய இழப்பு!

image

அழகிரியின் வலதுகரமாக திகழ்ந்த பி.எம்.மன்னன் சற்றுமுன் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சென்னை இல்லத்தில் EPS-ஐ சந்தித்து மன்னனின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரும் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். 2006-11-ல் மதுரை துணை மேயராக இருந்த மன்னன், அங்கு முக்கிய முகமாக உள்ளார். அதனால், வரும் தேர்தலில் திமுகவுக்கு அப்பகுதியில் கணிசமான இழப்பை ஏற்படுத்தலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!