News January 15, 2026
அரசியல் தலைவர்களின் Pongal Celebration Clicks!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையிலேயே குளித்து புத்தாடைகள் அணிந்து லட்சக்கணக்கானோர் பொங்கலிட்டு வருகின்றனர். இந்நிலையில், புத்தரிசி, கரும்பு, வெல்லமுமாக பானையில் பொங்கல் பொங்கி வருவதை பார்த்து அரசியல் தலைவர்கள் பலர் கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்களை பார்க்க மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்யுங்கள்.
Similar News
News January 26, 2026
ஆக.15, ஜன.26: கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசம்!

*சுதந்திர தினத்தில் கீழிருந்து கொடி மேலே சென்று, முடிச்சு திறந்து பறக்கவிடப்படுவது ‘கொடியேற்றம்’ *குடியரசு தினத்தில் கம்பத்தின் உச்சியில் இருக்கும் கொடி அவிழ்க்கப்பட்டு பறக்கவிடப்படுவது ‘கொடியை பறக்கவிடுதல்’ *சுதந்திர தினத்தில் பிரதமரும், குடியரசு தினத்தில் ஜனாதிபதியும் கொடியை பறக்கவிடுவார்கள் *சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையிலும், குடியரசு தினத்தில் ராஜ்பாத்திலும் கொடி பறக்கவிடப்படும்.
News January 26, 2026
சற்றுமுன்: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் 1 அவுன்ஸ்(28g) $5,000-ஐ கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $68(இந்திய மதிப்பில் ₹6,228) உயர்ந்து $5,047-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி $5 உயர்ந்து $106 ஆக உள்ளது. இதனால், இன்றைய இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த 30 நாள்களில் மட்டும் $650 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News January 26, 2026
OPS-ஐ திமுக கூட்டணிக்கு இழுக்க முயற்சி: நயினார்

அமைச்சர் சேகர்பாபு, OPS-ஐ சந்தித்து பேசியது அவரை திமுக கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியாக இருக்கலாம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். குமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், TN-ல் எத்தனையோ பேர் கட்சி ஆரம்பித்தாலும் MGR ஆரம்பித்த அதிமுகதான் இன்றைக்கும் ஆளப்போகும் கட்சியாக இருப்பதாக கூறினார். மேலும், கூட்டணி குறித்து தேமுதிக விரைவில் நல்ல முடிவு எடுக்கும் எனவும் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.


