News March 31, 2026
அரசியல் தலைவர்களின் Fitness Secret என்ன தெரியுமா?

PM மோடி, ஸ்டாலின், ராகுல், EPS, அண்ணாமலை உள்பட அரசியல் தலைவர்கள் பலர் TN-ல் பம்பரம் போல பிரசாரம் செய்து வருகின்றனர். நாள் முழுக்க இவர்கள் எனர்ஜிடிக்காக இருப்பது எப்படி தெரியுமா? ➤வேலை பளு இருந்தாலும் தினசரி உடற்பயிற்சிக்கான ஒரு மணிநேரத்தை அவர்கள் சமரசம் செய்வதே இல்லை ➤சத்தான உணவை அளவாக சாப்பிடுகின்றனர் ➤விமர்சனங்களை தாங்கும் மன உறுதியை பெற தியானம் செய்கின்றனர். நீங்களும் இத ட்ரை பண்ணி பாருங்க.
Similar News
News April 14, 2026
பதவிக்காக கொள்கையை விட மாட்டேன்: வேல்முருகன்

தமிழ்நாடு எனக்கு வெறும் மாநிலமல்ல, அது நம் இனத்தின் சுயமரியாதை அடையாளம் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு வேலைகளில் 100% தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பது வெறும் முழக்கமல்ல; நம் இளைஞர்களின் எதிர்காலக் குரல் எனக் கூறினார். மேலும், பதவிக்காக கொள்கையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்; அதிகாரம் என்பது தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கும் ஒரு கருவி மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.
News April 14, 2026
தமிழ்நாடு தேர்தல்: தபால் வாக்குப்பதிவில் மாற்றம்

தபால் வாக்குப்பதிவில் சில இடங்களில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதனால் முறைகேட்டை தடுக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நுண்பார்வையாளர், 2 வாக்குப்பதிவு அலுவலர்கள், 1 போலீஸ், கேமராமேன் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில் 100 குழுக்கள் இயங்க உள்ளதாக ECI தெரிவித்துள்ளது. முன்னதாக, வேலூரில் தபால் வாக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
News April 14, 2026
அன்று தேமுதிக.. இன்று காங்கிரஸ்.. டென்ஷனில் திருமா

<<19613152>>தேமுதிகவை <<>>தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினருடன் விசிகவினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஊத்தங்கரை காங்., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த மூத்த தலைவர் தங்கபாலு, பாவக்கல் அம்பேத்கர் நகரில் பரப்புரை செய்யவில்லை. இதனால், ஆத்திரமடைந்த விசிகவினர், அவரின் வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் தெரிந்ததும், திருமா தனது கட்சியினரை கண்டித்ததுடன், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செல்ல அறிவுறுத்தினார்.


