News November 15, 2024

அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் ஆலோசனைக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல ஆணையருமான வெங்கடேஷ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Similar News

News March 2, 2026

கள்ளக்குறிச்சி: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

கள்ளக்குறிச்சி மக்களே, அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 2, 2026

+2 பொதுத்தேர்வு – மகிழ்ச்சியுடன் மாணவர்கள் கூறிய பதில்!

image

தமிழகம் முழுவதும் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றன. மணலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களிடம் கேட்டபோது, வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க அனைத்துத் தேர்வு மையங்களிலும் காவல்துறைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

News March 2, 2026

+2 பொதுத்தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

தமிழக முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வு தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!