News May 27, 2024
அரசியல் கட்சியினருக்கு சம்மன் அனுப்ப முடிவு

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மரண வழக்கில் தற்போது சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் மரண வாக்குமூலம் கடிதத்தில் கூறிய அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களையும் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் இன்று தெரிவித்தனர்.
Similar News
News September 9, 2025
காணொளியில் மாவட்ட செயலாளர் கலந்துரையாடல்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று (செப்.9) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் இரா. ஆவுடையப்பன் திருநெல்வேலி திமுக மாவட்ட அலுவலகத்தில் வைத்து காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார்.
News September 9, 2025
நெல்லை: விருது பெற ஆட்சியர் அழைப்பு..!

தமிழ்நாட்டில் சுற்றுலா தொழில் முனைவோரை ஊக்குவிக்க 17 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. சுற்றுலா ஆபரேட்டர், தங்குமிடம், உணவகம், சாகச சுற்றுலா, வழிகாட்டி உள்ளிட்டவை இதில் அடங்கும். தகுதியுள்ளவர்கள் www.tntourismawards.com இணையதளத்தில் செப்.15, 2025-க்குள் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை (0462-2500104, 9176995877) தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News September 9, 2025
இ எஸ் ஐ சி துணை மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்

நெல்லை இ எஸ் ஐ சி துணை மண்டல அலுவலகத்தில் நாளை 10ம் தேதி மாலை 4 மணிக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என பொறுப்பு அதிகாரி இணை இயக்குனர் பாஸ்கர் தெரிவித்துள்ளார். முகாமில் மருத்துவமனை கண்காணிப்பாளர் குறைதீர்க்கும் அதிகாரி மருத்துவ அலுவலர் பங்கேற்கின்றனர் பயனாளிகள் குறை ஏதும் இருப்பின் முகாமில் தெரிவித்து நிவர்த்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.