News March 19, 2024
அரசியல் கட்சியினருக்கு எச்சரிக்கை – ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் இன்று(மார்ச்.19) மாலை 3 மணிக்குள் கட்டடங்களின் சுவர்களில் உள்ள விளம்பரங்கள் அளிக்கப்பட வேண்டும். மேலும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும், இல்லையென்றால் அரசே அகற்றி அந்த செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளர் தேர்தல் கணக்கில் சேர்க்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 5, 2025
தூத்துக்குடி: ரூ.1 லட்சம் ஊதியத்தில் விமான நிலைய வேலை.!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு 976 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடிந்தவர்கள் செப்.27 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள்<
News September 5, 2025
தூத்துக்குடி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க
News September 5, 2025
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பிரிவிற்கு 3 சுகாதாரப் பணியாளர்கள், 3 காவலாளிகள், மற்றும் ஒரு கணினி உள்ளீட்டாளர் பணி இடங்கள் காலியாக உள்ளது. இந்த தற்காலிக பணிக்கு வரும் 15ஆம் தேதிக்குள் அரசு மருத்துவமனையில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.