News February 4, 2026
அரசியலில் புதிய புயலை கிளப்பும் சசிகலா

அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வரும் நிலையில், சசிகலாவின் அடுத்த நகர்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை என <<19049108>>EPS <<>>கூறியிருந்தார். இதனையடுத்து, தனது ஆதரவாளர்களை போட்டியிட வைக்க சசிகலா முடிவெடுத்துள்ளார். புதிய அமைப்பு தொடங்குவதா அல்லது தனது சகோதரர் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதா என ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
Similar News
News February 6, 2026
தவெகவின் இணையதளம் முடங்கியது!

தேர்தல் அறிக்கையில் மக்களின் பரிந்துரைகளை பதிவு செய்வதற்காக தவெக வெளியிட்ட இணையதளம் அடுத்த சில மணி நேரங்களிலேயே முடங்கியது. ஒரே நேரத்தில் அதிகப்படியானோர் இணையதளத்தை அணுகியதால் ஸ்தம்பித்ததாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கும் வகையில் tvkmanifesto2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளது.
News February 6, 2026
ராசி பலன்கள் (06.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 6, 2026
பறவை காய்ச்சல்.. இதெல்லாம் பண்ணாதீங்க!

தமிழகத்தில் <<19056428>>பறவைக் காய்ச்சல்<<>> பரவி வருவதன் எதிரொலியாக, அனைத்து மாவட்டங்களுக்கும் பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகியவை பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சரிவர சமைக்கப்படாத முட்டை, இறைச்சிகளை தவிர்க்குமாறும், பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


