News November 17, 2024
அரசியலில் இருந்து விலக தயார்: சித்தராமையா

கர்நாடக காங்கிரஸ் அரசு மீதான குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வுபெறத் தயார் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். மக்கள் பணத்தை கர்நாடக அரசு கொள்ளையடித்து, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதாக மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு முதல்வர் சித்தராமையா இவ்வாறு அளித்துள்ளார்.
Similar News
News April 2, 2026
விஜய்யின் முடிவுக்கு திருமா வரவேற்பு.. எதற்காக?

பாஜக அழுத்தம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையிலும் அக்கட்சியுடன் விஜய் கூட்டணி அமைக்கவில்லை என்ற கருத்து குறித்து திருமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அவரது முடிவு வரவேற்கத்தக்கது, இதனால் மட்டுமே அவர் பாஜகவை எதிர்க்கிறார் என்று அர்த்தமாகாது. அவரது நிலைப்பாடு தற்காலிகமானது என பதிலளித்துள்ளார். பாஜகவை நேரடியாக விமர்சிக்காத விஜய் தனது பிம்பத்தை தக்கவைப்பதற்காக கூட இம்முடிவை எடுத்திருக்கலாம் என்றார்.
News April 2, 2026
இளம்பெண் நெஞ்சின் மீது அமர்ந்து கொலை செய்த தந்தை

காதல் திருமணம் செய்த மகளை பெற்ற தந்தையே நெஞ்சின் மீது அமர்ந்து மூச்சுத்திணற செய்து கொலை செய்த கொடூர சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. மச்செர்லாவை சேர்ந்த செளடேஸ்வரி(22), அதே பகுதியை சேர்ந்த நாகராஜுவை கடந்த மாதம் 4-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி மகளை வீட்டிற்கு அழைத்து கொலை செய்துவிட்டு நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
News April 2, 2026
இதுக்கு ₹4,000 கோடியா? ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!

₹4,000 கோடி செலவில் உருவாகும் ‘<<19544676>>ராமாயணா<<>>’ ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள், டீசரால் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர். VFX காட்சிகள் AI-ல் உருவாக்கப்பட்டது போல தெரிவதாகவும், குரங்கு வடிவங்கள் கார்ட்டூனை போல இருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர். ஏற்கெனவே, ‘ஆதிபுருஷ்’ சம்பவம் செய்த நிலையில், இந்த படமும் ஏமாற்றிவிடுமோ என்ற விமர்சனம் எழுந்துள்ளது. நீங்க என்ன சொல்றீங்க?


