News January 24, 2026

அரசியலா.. நானா.. பதிலளித்த நடிகை

image

நடிகை பாவனா கேரள சட்டமன்ற தேர்தலில் சிபிஐ(எம்) வேட்பாளராக களமிறங்குவதாக SM-ல் தகவல்கள் தீயாய் பரவின. இதுகுறித்து பேசிய அவர், இது முற்றிலும் பொய்யான செய்தி எனவும் தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் துளியும் இல்லாதபோது, இதுபோன்ற வதந்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை எனவும் கூறினார். மேலும், இந்த செய்தியை பார்த்து நான் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை என்றார்.

Similar News

News January 28, 2026

இந்தியாவின் வெற்றிநடையை தடுக்குமா நியூசிலாந்து?

image

இந்தியா – நியூசிலாந்து இடையேயான 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கெனவே 3-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. மறுபக்கம் தொடர் தோல்வியால் துவண்டிருக்கும் நியூசி., அணி இன்று வெற்றிக்காக போராடும். இன்னும் ஒரு வாரத்தில் டி20 WC தொடங்கும் நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற இரு அணிகளுமே நிச்சயம் வரிந்துகட்டும்!

News January 28, 2026

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

image

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து பிப்., 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பின்னர் 2 முதல் 4-ம் தேதி வரை ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படுகிறது. முன்னதாக நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

News January 28, 2026

தைப்பூசம்: இந்த ஒரு நாள் விரதமே போதும்

image

சூரபத்மனை அழிக்க பார்வதிதேவி, முருகப்பெருமானுக்கு ஞானவேலை வழங்கிய நாளே தைப்பூசம் ஆகும். வரும் பிப்ரவரி 1-ம் தேதி இந்நாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக, அனைத்து பக்தர்களும் 48 நாள்கள் விரதம் இருந்து முருகனை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. தைப்பூச நாள் அன்று ஒருநாள் மட்டும் மனத் தூய்மையுடனும், முழு பக்தியுடனும் வழிபட்டாலே, முருகனின் முழு அருள் கிடைக்கும் என்பதே தைப்பூசத்தின் மைய கருத்து.

error: Content is protected !!