News May 14, 2024

அரசினர் மகளிர் கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு

image

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 2023 – 2024ஆம் ஆண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை பருவத் தேர்வு முடிவுகள் இன்று மாலை www.kngac.ac.in என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மறுகூட்டல் மற்றும் ஒளிநகல் பிரதிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 06.06.2024, மறுமதிப்பீட்டுக்கு கடைசி நாள், 08.06.2024, உடனடி தேர்விற்கு 11.06.2024 கடைசிநாள் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News April 6, 2026

தஞ்சை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

தஞ்சை மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News April 6, 2026

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராஜினாமா!

image

தஞ்சை மாநகராட்சி மேயராக சண்.இராமநாதன் இருந்து வருகிறார். இந்நிலையில் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக சண்.இராமநாதன் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ள காரணத்தால், இன்று மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனரிடம் தனது மேயர் பதிவியை ராஜினாமா செய்து கடிதத்தை வழங்கினார்.

News April 6, 2026

தஞ்சாவூர் மாவட்டத்தில் 507 மிமீ மழை பதிவு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் 19 மிமீ, வல்லம் 45 மிமீ, திருவையாறு 31 மிமீ, பூதலூர் 50.20 மிமீ, ஒரத்தநாடு 54 மிமீ, வெட்டிக்காடு 43.60 மிமீ, பாபநாசம் 29 மிமீ, அய்யம்பேட்டை 38 மிமீ, பேராவூரணி 63.20 மிமீ, மதுக்கூர் 24.60 மிமீ, திருக்காட்டுப்பள்ளி 18.60 மிமீ, நெய்வாசல் தெபாதி 12 மிமீ என மாவட்டம் முழுவதும் சராசரியாக 507.50 மிமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!