News March 29, 2024

அரக்கோணம் தொகுதி: 29 வேட்பு மனுக்கள் ஏற்பு

image

மக்களவை தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் போட்டியிட ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெறப்பட்ட 44 மனுக்களில், இருமுறை சமர்ப்பிக்கப்பட்ட 10 மனுக்களும் முதல் மனுவுடன் இணைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அரக்கோணம் தொகுதியில் 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Similar News

News October 29, 2025

திருத்தப் பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் பணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா தலைமையில் இன்று (அக்.29) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News October 29, 2025

கல்லூரி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து

image

வேலூரில் இருந்து திருத்தணிக்கு அரசு பேருந்து இன்று அக்.29ஆம் தேதி சென்று கொண்டிருந்தது பெருங்காஞ்சி ஏரிக்கரை பகுதியில் செல்லும் போது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மீது அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் கல்லூரி பேருந்தில் முன்பக்க கண்ணாடி உடைந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 29, 2025

ராணிப்பேட்டை: ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் வேண்டுமா?

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<> https://tnuwwb.tn.gov.in/ <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். 5)விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!