News January 3, 2026

அரக்கோணம்: தீ விபத்தில் பள்ளி மாணவன் பலி!

image

அரக்கோணம் அடுத்த வளர்புரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் செல்வகுமார் (11) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன் வீட்டின் அருகே உள்ள கால்வாயில் மீன் பிடித்து, அதனை சுடுவதற்காக கட்டைகளை அடுக்கி மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பை பற்ற வைத்த போது, தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Similar News

News January 22, 2026

அரக்கோணம்: கிணற்றில் மிதந்த ஆண் பிணம்

image

சயனபுரத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி தினேஷ் (24). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல் போனார். அவரது தந்தை இன்று (ஜன.22) நெமிலி போலீசில் புகார் கொடுக்க இருந்த நிலையில் அங்குள்ள கிணற்றில் தினேஷ் உடல் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 22, 2026

இராணிப்பேட்டை: குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு!

image

“ஒவ்வொரு குழந்தையும் சரியான பாதையில் செல்ல தகுதியானவர்கள்” என்ற வாசகத்துடன், இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (ஜன.22) விழிப்புணர்வுப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. குழந்தைகள் வேலைக்குச் செல்வதைத் தவிர்த்து, பள்ளிக்குச் செல்வதே சரியான பாதை என்பதை வலியுறுத்தும் வகையில் இப்பதிவு அமைந்துள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கு பகிரவும்.

News January 22, 2026

ராணிப்பேட்டையில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!