News April 24, 2024

அரக்கோணம்: சொத்து தகராறில் விரட்டி விரட்டி வெட்டு

image

அரக்கோணம் அடுத்த வேடல் காந்திநகரை சேர்ந்தவர் நரசிம்மன்(46). விவசாயியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு நபருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று(ஏப்.22) இரவு நரசிம்மனை ஒரு கும்பல் கத்தியால் வெட்டியது. உயிர் தப்பிக்க நரசிம்மன் அங்கும் இங்கும் ஓடினார். அப்போதும் அவரை விடாமல் அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த நரசிம்மன் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.

Similar News

News April 18, 2025

ராணிப்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

ராணிப்பேட்டையில் இயங்கி வரும் Swap Development Solutions என்ற தனியார் நிறுவனத்தில் உதவியாளருக்கான 20 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ஆம் வகுப்புக்கு கீழ் படித்திருந்தால் போதும். முன் அனுபவம் தேவை இல்லை. 18 – 40 வயதிற்குட்பட்ட இருபாலரும் வரும் ஜூன் 11ஆம் தேதிக்கு முன்னர் <>விண்ணப்பிக்க <<>>வேண்டும். அனுபவத்தின் அடிப்படையில் ரூ.15,000 முதல் சம்பளம் வழங்கப்படும். வேலை தேடுபவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 18, 2025

ஒரே நாளில் 1,800 நெல் மூட்டைகள் விற்பனை

image

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் தானியங்கள், நெல் பயிர் களை கலவை – வாழைப் பந்தல் சாலையில் உள்ள ஒழுங்குமுறை கூடத்தில் விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று (ஏப்ரல்.17) ஒரே நாளில் 1800 நெல் மூட்டைகள் கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குவிந்ததுஇதில் ஸ்ரீ நெல் ரகம் அதிகபட்சமாக ரூ.1,429 க்கு விற்பனை

News April 18, 2025

கோவிலில் சிலை திருடிய பெண் கைது

image

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைனூரில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோயிலில் வெண்கல மாணிக்கவாசகர் சிலை மற்றும் பூஜைப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஜனனி (30) என்பவர் நேற்று (ஏப்ரல்.17) கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸாரிடமிருந்து தப்பியோடினார். சுமார் 3 மணி நேர தேடலுக்குப் பின் பொய்ப்பாக்கம் பகுதியில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!