News October 25, 2025
அரக்கோணம்: சிலிண்டர் வெடித்து விபத்து – அதிகாரிகள் விசாரணை

ராணிப்பேட்டை: கீழாந்தூர் கிராமம், பெரிய தெருவை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரது வீட்டில் இன்று (அக்.25) காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதே நேரம் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. காஸ் சிலிண்டர் வெடி விபத்து குறித்து அரக்கோணம் வட்டாட்சியர் மற்றும் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Similar News
News January 31, 2026
ராணிப்பேட்டையில் பெண் துடிதுடித்து பலி!

பின்னாவரம் கிராமத்தில் நேற்று(ஜன.30) அரக்கோணம் – காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் ஒருவர் இறந்தார். நெமிலி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? அவர் மீது மோதிய வாகனம் எது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 31, 2026
ராணிப்பேட்டை: 3 வயது குழந்தை பரிதாப பலி!

கீழ்குப்பம் மேட்டு நகரை சேர்ந்தவர் டேனியல், கூலி தொழிலாளி. இவரது மூன்று வயது ஆண் குழந்தை ஆலன் சூர்யா. இவர், நேற்று(ஜன.30) வீட்டின் அருகே உள்ள குப்பை கொட்டும் பள்ளத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கு தேங்கி இருந்த தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். டவுன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.