News December 13, 2024
அரக்கோணம் அருகே ரப்பர் படகு மூலம் 4 பேர் மீட்பு

அரக்கோணம் அடுத்த தக்கோலம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் இரண்டு வீடுகள் அமைந்துள்ளன. இரு நாட்களாக பெய்த கனமழையால் இரண்டு வீடுகளையும் மழை நீர் சூழ்ந்துகொண்டது. இதனால் அவர்கள் வெளியே வர முடியாமல் தத்தளித்த நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் ரப்பர் படகில் இன்று அங்கு சென்று இரண்டு ஆண், இரண்டு பெண், 12 ஆடு, 25 கோழிகளை பாதுகாப்பாக மீட்டனர்.
Similar News
News August 16, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஆக.15) இரவு முதல் இன்று(ஆக.16) காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
News August 15, 2025
ராணிப்பேட்டை: காவல் அதிகாரிகளுக்கு விருது

இன்று (ஆகஸ்ட்-15) 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அய்மான் ஜமால் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி, காவல் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 37 காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சக ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பில் வாழ்த்துக்கள் வழங்கப்பட்டது.
News August 15, 2025
ராணிப்பேட்டையில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

இராணிப்பேட்டை மாவட்டம் களியரசு (வயது 20) என்பவர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக காவல் துறை நடவடிக்கை எடுத்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணையின்பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 14.08.2025 அன்று கைது செய்யப்பட்ட அவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.