News March 24, 2025

அரக்கோணத்தில் புகழ்பெற்ற குடைவரை கோவில்

image

அரக்கோணம் அடுத்த மகேந்திரவாடியில் உள்ள மகேந்திர விஷ்ணுகிருகம், மிகவும் பழமையான குடைவரை கோயில்களில் ஒன்றாகும். கி.பி. 600-630 ஆம் ஆண்டுகளில் மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்ட குடைவரை, அவரது பெயரால் மகேந்திர விஷ்ணுகிருகம் என அழைக்கப்படுகிறது. தனித்துவமான சிற்பக்கலையுடன், வெட்டவெளியான இடத்தில் சிறுபாறையை குடையப்பட்டுள்ளது. அமைப்பு, பல்லவர் கால குடைவரை சிற்பக்கலையின் ஒரு அற்புத சின்னமாக திகழ்கிறது.

Similar News

News August 25, 2025

ராணிப்பேட்டை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள். (<<17512847>>தொடர்ச்சி<<>>)

News August 25, 2025

ராணிப்பேட்டை: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

image

ராணிப்பேட்டை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே க்ளிக் செய்து உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். (SHARE செய்யுங்கள்)

News August 25, 2025

கட்டிடப் பணிக்கு அடிக்கல்

image

ராணிப்பேட்டை மாவட்டம் புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் சுகாதார நிலையம் கட்டும் பணிக்கு அமைச்சர் காந்தி இன்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் கலெக்டர் சந்திரகலா, சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம், பேரூராட்சித் தலைவர் ரேணுகாதேவி சரவணன், து.தலைவர் சந்திரசேகரன், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், செயல் அலுவலர் எழிலரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!