News January 19, 2025
அரக்கோணத்தில் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்

Dr.அகர்வால் கண் மருத்துவமனை, சென்னை மற்றும் ஸ்ரீ மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ், C.S.I.சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தும் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் ஜன.19 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிமுதல் மதியம் 12.00 மணிவரை CSI சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணத்தில் நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 5, 2026
ராணிப்பேட்டையில் தட்டி தூக்கிய அமைச்சர்!

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுராயபுரம் கிராமத்தில் நேற்று(மார்ச் 4) முக்கிய அரசியல் நகர்வு ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அக்கட்சியிலிருந்து விலகி, திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ஆர். காந்தி முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
News March 5, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச் 04) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
ராணிப்பேட்டை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.ராணிப்பேட்டை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0416-2255599 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க!


