News November 26, 2025

அயோத்தியில் தர்மக்கொடி ஏற்றம்: PM மோடி

image

அயோத்தி ராமர் கோயிலில் காவி கொடி ஏற்றப்பட்டுள்ளதால், பல நூற்றாண்டுகளின் வலி முடிவுக்கு வந்துள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ஏற்றப்பட்டுள்ள தர்மக்கொடி இந்திய நாகரிகத்தின் புதிய எழுச்சி என்றும், இந்திய கலாசாரத்தின் அடையாளம் எனவும் அவர் பேசியுள்ளார். மேலும், ராம பக்தர்களின் 500 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 5, 2026

விடுமுறை.. தமிழக அரசு கூடுதல் பஸ்கள் அறிவிப்பு

image

புனித வெள்ளி, வார விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல 2,257 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது, ஊர்களுக்குச் சென்றவர்கள் விடுமுறை முடிந்து பணியிடங்களுக்கு திரும்ப ஏதுவாக, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இன்று கூடுதல் பஸ்களை அரசு போக்குவரத்துத் துறை இயக்கி வருகிறது. TNSTC செயலி (அ) <>இணையதளத்தில்<<>> டிக்கெட்களை முன்பதிவு செய்து பயணத்தை ஈசியாக்குங்கள் நண்பர்களே!

News April 5, 2026

மேலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன்

image

27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ், மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் MP விஸ்வநாதன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கார்த்தி சிதம்பரம் ஒருவரையும், மாணிக்கம் தாகூர் மற்றொருவரையும் வேட்பாளராக கைகாட்டியதால் இழுபறி ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

News April 5, 2026

போர்.. டிரம்ப் பரபரப்பு அறிவிப்பு

image

போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் இறுதியாகாவிட்டால் ஈரான் நரகமாக மாறும் என எச்சரித்து, 48 மணிநேர கெடுவை <<19569828>>டிரம்ப் விதித்துள்ளார்.<<>> இதற்கிடையே, ஈரானில் தரைவழி தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாகவும், 300-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தீவிர தாக்குதலை நடத்த தயார் என்றும் அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மேற்காசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

error: Content is protected !!