News August 19, 2025
அயோத்தியாப்பட்டணம் நூல் மில்லில் திடீர் தீ விபத்து

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள நூல் தொழிற்சாலையில் இன்று (ஆக.19) மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான நூல் மூட்டைகள், இயந்திரங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 26, 2026
சேலம்: ரேஷன் அட்டையில் திருத்தமா?

சேலம் மக்களே, சக்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1)இங்கு <
2) அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3)அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4) சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452-52525 எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் “HI” அனுப்பி தெரிஞ்சுக்கலாம். (SHARE பண்ணுங்க)
News January 26, 2026
சேலத்தில் டாஸ்மாக் மது விற்பனை 20% அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 220 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் சராசரியாக 4 முதல் 5 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு கடைகள் மூடப்படுவதால், மதுப்பிரியர்கள் நேற்று முன்தினமே மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக நேற்றைய விற்பனை வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
News January 26, 2026
சேலம்: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

சேலம் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)


