News May 27, 2024
அயல்நாடு செல்வோருக்கு உதவி: கலெக்டர் தகவல்

அயல்நாடு செல்லும் தமிழர்களுக்கு உரிய இடப்பெயர்வை உறுதி செய்ய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக பழைய கட்டடம் முதல் தளம் அறை எண் 36ல்
சந்தானம் என்பவரை
(8610464077, 9791525231) தொடர்பு கொண்டு நலத்திட்டங்கள், வாரிய உறுப்பினர் பதிவு விபரங்கள் பெறலாம். கட்டணமில்லா சேவை மையத்தை 1800 309 3793 (இந்தியாவிற்குள்), 80690 09901 (அயல் நாட்டிலிருந்து) தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 12, 2025
பரமக்குடி அருகே அரசு பேருந்துகள் மோதி விபத்து

பரமக்குடி அருகே மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருவரங்கி அருகே அரசு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து, பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 12, 2025
ராமநாதபுரத்திற்கு வருகை தரும் செல்வ பெருந்தகை

வாக்கு திருட்டை தடுக்க அகில இந்திய மீனவர் காங். சார்பில் பொதுக்கூட்டம் ராமநாதபுரம் அரண்மனை திடலில் நாளை (13.9.2025) மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் Ex. உள்துறை, நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வ பெருந்தகை MLA ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஏற்பாடு செய்துள்ளார்.
News September 12, 2025
பரமக்குடியில் நிற்குமா வெளிமாநில ரயில்

பரமக்குடி ரயில் நிலையம் வணிக, கல்வி, சுற்றுலா ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த நிதியாண்டில் ரூ.10 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டிய நிலையமாக இருந்தும், வெளிமாநில விரைவு ரயில்கள் இங்கு நிற்கவில்லை. ஹூப்ளி, செகந்திராபாத், பெரோஷ்பூர், அயோத்யா, மங்களூர், கன்னியாகுமரி செல்லும் ரயில்கள் பரமக்குடியில் நிறுத்தப்பட வேண்டும் என பயனாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.