News July 5, 2025

அயப்பாக்கம் துாய்மை பணியாளர் நேர்மைக்கு தங்க மோதிரம் பரிசு

image

அயப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பணியாற்றும் ஜெயமணி, துாய்மை பணி மேற்கொண்டார். கடந்த 27ம் தேதி நடந்த திருமணத்திற்கு வந்திருந்த மாடம்பாக்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் – மீனாட்சி தம்பதி, தவறவிட்டது தெரிந்தது. 25 லட்சம் மதிப்பிலான நகைகள் அடங்கிய பை, நேற்று தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயமணியின் நேர்மையை பாராட்டி, தம்பதி அவருக்கு அரை சவரன் மோதிரத்தை பரிசளித்தனர்.

Similar News

News July 5, 2025

சென்னை மாநகராட்சிக்கு 2027ல் புதிய கவுன்சில் மண்டபம்

image

சென்னை மாநகராட்சி புதிய கவுன்சில் மண்டபம் 2026ல் தயாராகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப சிக்கலால் திட்டம் ஒரு வருடம் தாமதமாகி 2027ல் மட்டுமே முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.77 கோடி மதிப்பில் நான்கு தளங்களுடன், ஒரே மண்டபத்தில் மேயர், துணை மேயர் அலுவல்கள் மற்றும் கவுன்சில் கூட்டங்கள் நடத்தும் மாநாட்டு அறைகள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டது.

News July 5, 2025

ஊர்க்காவல் படையில் வேலை

image

சென்னை ஊர்க்காவல் படையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குற்ற பின்னனி இல்லாதவர்கள், சென்னையில் வசிப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் சுயவிவரத்தை வரும் 30ஆம் தேதிக்குள் addlcophqrs4@gmail.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பலாம். மேலும் தகவல்களுக்கு 95667 76222 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். <<16935096>>தொடர்ச்சி<<>>

News July 5, 2025

ஊர்க்காவல் படையில் வேலை

image

சமூக சேவகர்கள், ஆசிரியர்கள், உயர் பதவி வகிப்பவர்கள், சுயதொழில் புரிபவர்கள், உயர் தகுதி வாய்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் பொது நல தொண்டில் ஈடுபாடு கொண்ட சேவை செய்ய விருப்பம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை பெருநகர ஊர்காவல்படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை – 15 என்ற முகவரிக்கு உங்கள் சுயவிவரத்தை தபால் அனுப்பலாம்.

error: Content is protected !!