News April 18, 2024
அயனாவரம்: ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி வீதி உலா

சென்னை, அயனாவரம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் சித்திரை பிரமோற்சவம் ஏப்.13ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 5வது நாளான இன்று(ஏப்.18) இரவு பெரிய ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி எழுந்தருளி, சப்பரத்தில் வீதி உலா நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற வருகைதருமாறு கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News February 13, 2026
குடிநீர் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு!

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், பொதுமக்களின் குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான குறைகளைக் களைவதற்காக “குறை தீர்க்கும் கூட்டம்” நாளை பிப். 14, (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டம் சென்னையின் 15 பகுதி அலுவலகங்களிலும் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 13, 2026
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 12, 2026
சென்னை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

சென்னையில், 19 மண்டல உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகங்களில் வரும், (பிப்.14) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடக்க உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், பிழை திருத்தம், மொபைல் போன் எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் செய்து தரப்படும். மேலும், ரேஷன் கடைகள் செயல்பாடு, விற்கப்படும் பொருட்கள் சேவைகளின் குறைபாடு குறித்தும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க


