News November 10, 2025
‘அம்மா SORRY.. என் சாவுக்கு இவர்கள்தான் காரணம்’

‘அம்மா என்னை மன்னித்துவிடு. என் கணவன் விரும்புவது என் உடலை மட்டுமே, மனதை அல்ல. என் சாவிற்கு மாமனார், மாமியார் உள்ளிட்டோர்தான் காரணம்’. கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த ரேஷ்மாவின் கடைசி வரிகள் இவை. திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுத்த நகைகளை தனது பெற்றோரிடம் திரும்பிக் கொடுக்க வேண்டும் என கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Similar News
News November 10, 2025
அதிமுகவில் குடும்ப அரசியல் இருக்கிறதா? EPS

அதிமுகவில் EPS மகனின் தலையீடு இருப்பதாக சமீபத்தில் செங்கோட்டையன் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், வேறு குற்றச்சாட்டு இல்லாததால் அதிமுகவில் குடும்ப அரசியல் இருக்கிறது என செங்கோட்டையன் கூறுவதாக EPS தெரிவித்துள்ளார். மேலும், தனது மகனை யாராவது கட்சி நிகழ்ச்சியில் பார்த்துள்ளீர்களா என்ற கேள்வியையும் அவர் முன் வைத்துள்ளார்.
News November 10, 2025
வழுக்கை தலை.. எந்த நாட்டில் அதிகம் தெரியுமா?

ஆண்களுக்கு வழுக்கை தலை பெரும் பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது. சிலர் மட்டுமே இதனை வருத்தமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். பலரும் இதற்காக பெரும் கவலை அடைகின்றனர். உலகிலேயே அதிக எண்ணிக்கையில் வழுக்கைத் தலையுடன் உள்ள ஆண்கள் எந்தெந்த நாடுகளில் உள்ளனர் என்று தெரியுமா? மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இந்தியா இருக்கா, இல்லையா?
News November 10, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

22 கேரட் தங்கம் இன்று ஒரே நாளில் தாறுமாறாக ₹1,440 அதிகரித்து நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹880 அதிகரித்த நிலையில், மாலையில் மேலும் ₹560 உயர்ந்துள்ளது. தற்போது, சென்னையில் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,480-க்கும், 1 சவரன் ₹91,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


