News September 20, 2024
அம்மா உணவகம் அரசு பள்ளியா என இபிஎஸ் கேள்வி

சென்னை ஆலந்தூர் அருகே அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வந்த ஊடக செய்தி மிகுந்த மனவேதனை அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், ஆலந்தூர் அம்மா உணவகம் முழுமையாக செயல்பட வேண்டும் என்றும் உடனடியாக மாணவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ஈ.பி.எஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News September 15, 2025
கே.கே.நகரில் விழுந்த ராட்சத மரம்

சென்னை, கே.கே.நகர் 80 அடி சாலையில் பெரிய மரம் விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 20 நாட்களுக்கு முன்பாக மழை நீர் வடிகால் பணியின் போது பள்ளம் தோண்டி மூடப்பட்டுள்ளது. அப்போது, பள்ளம் தோண்டும் போது மரத்தின் வேர்களை வெட்டியதால் பிடிமானம் இல்லாமல் சற்றுமுன் மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
News September 15, 2025
தயார் நிலையில் மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தாழ்வான இடங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைக்காக மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் ரிப்பன் கட்டட வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டு, தயார்நிலையில் வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
News September 15, 2025
சென்னை: இலவசமாக காசிக்கு போக சூப்பர் வாய்ப்பு

தமிழக இந்து சமய அறநிலையத்துறை 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு ரயில் மூலமாக இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல உள்ளது. 60 முதல் 70 வயதுடைய, ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்குள் வருமானம் உள்ள பக்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை சென்னை மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது இந்த <