News August 31, 2025
அம்மன்குறிச்சி சிவன் கோவிலில் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா நகரபட்டி அடுத்துள்ள அம்மன்குறிச்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இரட்டை தேரோட்டம் இன்று (ஆக.,31) மாலை நடைபெற உள்ளது. இந்தத் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Similar News
News September 3, 2025
புதுகை: குழந்தைகள் உதவி மையத்தில் வேலை

புதுகை மாவட்ட குழந்தைகள் உதவி மைய அலுவலகத்தில் குழந்தைகள் உதவி மேற்பார்வையாளர் மற்றும் வழக்கு பணியாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு முறையே டிகிரி, 12-ம் வகுப்பு முடித்தோர் https;//Pudukkottai nick.in இல் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வரும் செப்.,12-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News September 3, 2025
தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்: ஆட்சியர் தகவல்

புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் செப்.,8-ம் தேதி தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. அதில் 10, 12, பட்டயப்படிப்பு முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதந்தோறும் ரூ.12,000 முதல் ரூ.16,000 வரை உதவித்தொகையுடன் சான்றிதழ் வழங்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News September 3, 2025
புதுகை: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் தலைமையில், புதுக்கோட்டை, இலுப்பூர் மற்றும் கந்தர்வகோட்டை பகுதிக்கான மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் புதுக்கோட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் செப்.,4-ம் தேதி காலை10.30 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறும் என செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.