News June 4, 2024
அம்பை தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக நயினார் நரேந்திரன் முதல் சுற்றில் பின்னடைவில் உள்ளார். நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி முதல் சுற்று பாஜக நயினார் நாகேந்திரன் 2903,
காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் 3244 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 397 வாக்குகளும், நாம் தமிழர் 479 பெற்றுள்ளது.
Similar News
News September 12, 2025
நெல்லை: ஒருவருக்கு ஆயுள் தண்டனை!

திருநெல்வேலி, மானூரில் 2018-ல் நடந்த கொலை வழக்கில் குற்றவாளி மகாராஜனுக்கு திருநெல்வேலி நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தது.மேலும் முறையின்றி தடுத்தல் மற்றும் ஆபாசமாக பேசிய குற்றங்களுக்காகவும் தண்டனை வழங்கப்பட்டது. காவலர்கள் மற்றும் வழக்கறிஞர்களை மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் பாராட்டினார். இந்த ஆண்டில் மட்டும் 17 கொலை வழக்குகளில் தண்டனை வழங்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
News September 12, 2025
மாணவர் சேர்க்கை சரஸ்வதி பூஜை வரை நீட்டிப்பு

நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வருகிற சரஸ்வதி பூஜை தினம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது இங்கு மூன்றாண்டு படிப்புகளாக நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட கலை கற்றுத் தரப்படுகிறது. கற்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பஸ் பாஸ், சைக்கிள் வழங்கப்படும் என பள்ளி தலைமை ஆசிரியர் சிவகலை தெரிவித்தார்.
News September 12, 2025
நெல்லை வருகிறார் கமல்ஹாசன்!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கலந்தாலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். அதன்படி வரும் செப்.20ம் தேதி நெல்லை மண்டலத்தில் கமலஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.