News November 15, 2024
அம்பேத்கர் விருது: திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் 2024-25ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலத்தில் அறை எண் 113இல் விண்ணப்பம் பெற்று இந்த மாத இறுதிக்குள் நேரடியாகவோ அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
Similar News
News March 2, 2026
திருப்பூர்: விவசாயிக்கு கத்தி குத்து

நத்தக்காடையூர் அருகே மருதுறை அரண்மனைகாடு பகுதியை சேர்ந்தவர் சிவசாமி (48) விவசாயி. இவருக்கும் காளிவலசு பகுதியை சேர்ந்த பாலமுருகன் (43) என்பவருக்கும் இடையே, நிலம் பிரச்சினையில் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் பாலமுருகன் ஆத்திரம் அடைந்து, சிவசாமியை கல்லால் தாக்கி கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 2, 2026
திருப்பூரில் இளம்பெண் தற்கொலை

திருப்பூரைச் சேர்ந்த விகாஸ் கண்ணன் மனைவி சோபியா. கடந்த டிச.1-ம் தேதி திருமணமானவர். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முந்தினம் சோபியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே இச்சம்பவம் நடந்ததால், ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News March 1, 2026
திருப்பூர்: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா திருப்பூர் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0421-2478500 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.


