News January 28, 2026

அம்பேத்கர் பொன்மொழிகள்

image

*அறிவை தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும். *சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர். *ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள். *ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுய மரியாதை, அதை இழந்து வாழ்வதுதான் பெரிய அவமானம். *எப்போதோ சொன்ன ஒரு கருத்தை சிந்தனையுள்ள எந்த மனிதனும் பிடித்து கொண்டிருக்கமாட்டான்.

Similar News

News February 7, 2026

‘₹’ குறியீடு எப்படி உருவானது தெரியுமா?

image

ரூபாயின் குறியீடு எப்படி உருவானது என தெரியுமா? தேவநாகரி எழுத்து “र” (ra) மற்றும் நேர்கோடு இல்லாத லத்தீன் எழுத்து ‘R’ ஆகியவற்றின் கலவை இது. தேவநாகரி என்பது சமஸ்கிருதம், ஹிந்தி, மராத்தி போன்ற இந்திய மொழிகளை எழுதப் பயன்படுத்தப்படும் எழுத்து முறை. இந்த குறியீடு ஜூலை 15, 2010-ல் இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை திருச்சியை சேர்ந்த உதய குமார் என்பவர் வடிவமைத்தார். SHARE.

News February 7, 2026

பார்லி.,யில் பாஜகவினர் கத்திட்டே இருக்காங்க: TR பாலு

image

நாடாளுமன்றம் நடக்கிறது என சொன்னாலே சிரிப்பாக வருகிறது என MP டி.ஆர்.பாலு கூறியுள்ளார். நாடாளுமன்றம் முறையாக நடப்பதில்லை என்ற அவர், ஒரு கருத்தை முன்வைக்க எழும்போதே, பாஜகவினர் கத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தியாவின் 140 கோடி பேருக்கும் தலைகுனிவு என மக்கள் நினைப்பதாகவும் பேசியுள்ளார்.

News February 7, 2026

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: புதிய கருத்து கணிப்பு

image

TN தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் VOTE VIBE மற்றும் CHANAKYA தனித்தனியாக நடத்திய சர்வே முடிவுகளை CNN NEWS 18 வெளியிட்டுள்ளது. அதில், VOTE VIBE நிறுவனத்தின் சர்வேயின்படி, TN அடுத்த CM யார் என்ற கேள்விக்கு ஸ்டாலின் – 33.3%, EPS-29.8%, விஜய்-23.2% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரம், ஜனவரியில் CHANAKYA நடத்திய சர்வேயில் EPS – 33%, ஸ்டாலின் – 37%, விஜய்-24% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!